யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்து போராட்டம்!!


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவு தொடர்பில்  நடமாட்ட சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புத் தொிவித்து  போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்தியாவிலிருந்து வட மாகாணம் திரும்பியவர்களுக்கான தேசி அடையாள அட்டை, கடவுச்சீட்டு வழங்கள், பிறப்பு அத்தாச்சி பாத்திரம் பதிவுகள் உட்பட பல சேவைகள் வழங்குவதற்காக வட மாகாணத்தில் இருந்து பலர் வந்திருந்தனர்.

அதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவு தொடர்பில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்திற்குள்  நுழைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதற்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் உள்நுழைந்துள்ளனர்.

அத்துடன் ஓ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், எங்கள் பிள்ளைகளின் பெறுமதி வெறும் இரண்டு இலட்சமா? எங்களுக்கு வேண்டாம், நீதியில்லா  நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்சவே வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments