காமிகேஸ் டிரோன்கள் மூலம் கீவ்வில் தாக்குதலை நடத்தும் ரஷ்யா!!


ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஸ் டிரோன்களைக் கொண்டு, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன.

இன்று அதிகாலை கீவ் முழுவதும் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் உட்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, கீவ் உட்பட பல பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்ததோடு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


No comments