வைத்தியர் சிவரூபனின் வாழ்வியலே ஆதுரசாலை!இவ்வாண்டிற்கான சாகித்ய விருதுகள் விழா – 2022 இல் சிறந்த நாவலுக்கான சாகித்ய விருதினை பெற எழுத்தாளர் சிவ ஆரூரன் கடந்த மூன்று வருடங்களிற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவர் சின்னையா சிவரூபனின் பணிகளை மையப்படுத்தி எழுதிய நாவலான ஆதுரசாலை விருதை பெற்றுள்ளது. சாகித்ய விருதில் வடமாகாண சிறந்த நாவல்களில்; முதலிடத்தை (ஜீவநதி வெளியீடு) ஆதுரசாலை பெற்றுள்ளது.

பொறியியலாளரும் எழுத்தாளருமான சிவஆரூரன் சிறையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் வருகைதந்து விருதினை பெற்றுக்கொண்டார்.

யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட பளை ஆதார வைத்தியசாலையினை மருத்துவ அத்தியட்சகராக பொறுப்பேற்று மீளக்கடடியெழுப்பியவர் வைத்திய சின்னையா சிவரூபன்.

2019ம் ஆண்டினில் கைதான மருத்துவர் சிவரூபனுடன் கைதான ஏனையவர்கள் குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றிவிடுவிக்கப்பட்ட போதும் சிவரூபன் பிணையில் செல்ல கூட இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் மறுத்துவருகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியாக இருந்த போது அரச இயந்திரத்தினாலும் ஆதரவு குழுக்களாலும் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகள்,மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியவராக மருத்துவர் சின்னையா சிவரூபன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

இதனிடையே சிவ.ஆரூரன் சிறை கம்பிகளுக்கு பின்னால் அரசியல் கைதியாக வாழ்ந்து கொண்டு தமிழ் மீதான அளவற்ற பிடிப்பு காரணமாக கிடைக்கும் நேரத்தை பொன்னாகிக் கொண்டிருக்கும் அற்புத பிறவி தான் ஆரூரன். கல்வியில் பொறியியலாளர். இனப்பற்று கொண்டவர். 42 வயது இளைஞர்.
No comments