நிதி மோசடி:ஆசாத் சாலி விசாரணையில்!இலங்கையின்  மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சாட்சிகளை வழங்குவதற்காகவு அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

காணி ஒன்றினை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற 80 இலட்சம் ரூபாவினை குறித்த பெண்ணிடம் முதலீடு செய்ததாக வெளியான தகவல்கள் தொடர்பிலேயே அசாத் சாலி சாட்சியம் வழங்குவதற்கு முன்னிலையாகியுள்ளார்.

ஜானகி சிறிவர்தன என்ற பெண்ணின் ஊடாகவே 80 இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொடுத்ததாக அசாத்சாலி தெரிவித்திருந்தார்.

No comments