இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல்!!

கடந்த 1987 ம் ஆண்டு இதேநாளில் கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின்

நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments