உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர்: சவூதி அறிவிப்பு!!


உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு, 400 மில்லியன் டாலரை மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி வழங்குவதாக  சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் நேற்று வெள்ளிக்கிழமை (அக்.14) உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

முகமது பின் சல்மான் பேசுகையில், உக்ரைன் - ரஷியா இடையே சண்டை முடிவுக்கு கொண்டுவர சவூதி அரேபிய அரசு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், இரு தரப்புக்கு இடையே சமாதானம் செய்ய முயற்சிகளை தொடர தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments