அபயம்:வடக்கு ஆளுநர் !

"அபயம்" அவசர தொலைபேசி இலக்கம் வடமாகாண ஆளுநரின் பணிப்பிற்கு அமைய 25.10.2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அவசர தொலைபேசி இலக்கம் : 0706666677
மகளிர் மற்றும் சிறார்கள் குறிப்பாகப் பாடசாலை மாணவர்களுக்கு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு, உளவள மற்றும் தொழில் தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
சிறுவர் மற்றும் இளையோருக்கான ஆலோசனைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டாகவோ, தாம் வைத்துள்ள நல்ல திட்டங்கள், அரச இயந்திரத்தை மேலும் வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கு ஆலோசனைகள் என்பவற்றை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் வழங்கப்படுகிறது.
தயக்கமோ பயமோ இன்றி உதவிகளுக்கு 0706666677 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ள வடக்கு ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments