200 கிலோ கிராம் ஹெரோயிடன் 6 ஈரானியர்கள் கைது!


இலங்கை மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யும் நோக்கில் படகொன்றில் கடத்தப்பட்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேர் கேரளா கொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 6 பேரும் ஈரான் குடிமக்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த ஹெரோயின் போதைப்பொருளை கடலில் எறிய ஈரானிய பிரஜைகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து ஈரான் படகொன்றின் ஊடாக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


No comments