போதை மயக்கத்தில் யாழ்ப்பாணம்!யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அச்சுவேலி பத்தமேனி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த நபர் ஏற்கனவே ஹெரோயின் போதை பொருள் மற்றும் கஞ்சா போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை விற்று, போதைப்பொருள் வாங்கும் பழக்கத்தினை வழக்கமாகக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின், தேசிக்காய், மற்றும் சிறின்ஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

No comments