யாழ்ப்பாணம்?


யாழ்ப்பாணத்தில்  வீடியோ உரையாடலை வைத்துபாடசாலை மாணவியை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் காணொளி உரையாடலைஇளைஞர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அத்தோடு அதைவைத்து மிரட்டி அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மாணவியுடன் இளைஞன் ஒருவன் வீடியோவில் உரையாடலை சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டுள்ளான் .

இதன்போது அந்த உரையாடலை பதிவு செய்துள்ளான்.மாணவி துவாயுடன் இருக்கும் அந்த உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞனுக்கும் அவன் அனுப்பியுள்ளான் .

அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனை யோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளான் .

அதேவேளை இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது .

மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது .

மேலும் இதனையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞனும் அதனைப் பயன்படுத்தி மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .  

இதனிடையே ஊர்காவற்துறையில் மூன்று லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட சிறுவன் அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

ஊர் காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார்.

No comments