வவுணதீவில் இருவர் பலி!மட்டக்களப்பு - உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு உன்னிச்சை குளதில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், 16 வயதுடைய சிறுவன் திங்கட் கிழமை சடலமாக மீடக்கப்பட்டார், மற்றுமொருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments