மணல் அகழ்வு: உழவு இயந்திரம் பறிமுதல்

 


அனுமதி பத்திர விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் மாந்தை கிழக்கில் உழவு இயந்திரம் பறிமுதல்

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாலியாற்று பகுதியில்  அனுமதி பத்திர விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் நட்டாங்கண்டல் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்ட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த சாரதி(30 வயது) பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல பொலிசார் அனுமதித்துள்ளனர்

இதேவேளை குறித்த  வழக்கினை எதிர்வரும் புதன்கிழமை (11-10-2022) மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெடி

No comments