சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக போட்டியிடும் தமிழீழ மகளிர் கால்பந்தாட்டு அணி


சுதந்திர கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (CONIFA) உலகக் கால்பந்துக் கோப்பையில் முதல் முதறையாக தமிழீழ தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணி போட்டியிடுகிறது.

தமிழீழ மகளிர் கால்பந்தாட்ட அணியை ஆரம்பிப்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. அத்துடன் சுதந்திர கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராகவும் உள்ளது.

சுசிற்சர்லாந்து பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Sportscomplex Neufeld விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:00 மணிக்கு தமிழீழ தேசிய மகளிர் அணி தனது முதல் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடவுள்ளது.

தமிழீழ கால்பந்து சங்கம் TEFA இன் நோக்கம் அனைத்து வயது மற்றும் பாலினத்திற்கும் விளையாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும்.சர்வதேச ரீதியில் பிரிந்து கிடங்கும் திறன்கள் ஒருங்கிணைத்து  நமது திறமைகளை வெளிப்படுத்தும் சர்வதேச அரங்காக தமிழீழ கால்பந்து சங்கம் அமைகிறது.


No comments