பேச்சு பல்லக்கு:தம்பி கால்நடை!
வடமாகாணத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுகிறது.
கோதுமை மாவின் விலை 265 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வ தனியார் வர்த்தக நிலையங்களில் அவ்வாறான விலை குறைப்பு செய்யப்படவில்லை என தெரிவிக்கும் நுகர்வோர் தொடர்ந்தும் 400 ரூபாவிற்கே கோதுமை மாவினை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கும் அவர்கள் கோதுமை மா மொத்த விற்பனை நிலையத்தினை திடீர் பரிசோதனை செய்யும் போது பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
Post a Comment