சிறீதரன்-சாள்ஸ் புதிய கூட்டுமீண்டும் தேர்தல் களம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சிறீதரன் சுமந்திரன் எதிர்ப்பு கருத்துக்களை முன்வைக்க தொடங்கியுள்ளார்.ஒவ்வொரு தேர்தல் காலப்பகுதியிலும் இவ்வாறு வீரபிரதாபங்களை சொல்வதும் தேர்தல் வெற்றியின் பின்னர் ஒட்டிக்கொள்வதும் தொடர்கின்றது.

இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சகிதம் தனது கூட்டு அரசியலை சிறீதரன் ஆரம்பித்துள்ளார்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பாண்டியன்குளம் கரும் புள்ளியான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதன் போது தற்போதைய நாட்டின் பொருளாதார நிலமை மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகை தந்திருந்த குறித்த  கிராமத்தைச் சேர்ந்த ராசன் அவர்களினால் மூன்று குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக்காக காசோலைகளும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளிற்கு சிறீதரன்-சாள்ஸ் கூட்டு மக்களை சந்தித்திருந்தது.


No comments