பெண்களிற்கு பாலியல் தொல்லை:ஆண்களிற்கு மூலையில் கதிரை!இலங்கை காவல்துறையில் பெண் காவல்துறையினர் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் ஒருபுறமும் இன்னொரு புறம் தமிழ் காவல்துறையினரை ஒதுக்கி வைப்பதும் தொடர்கின்றது.

அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல்  தொல்லை கொடுத்து வந்த  காவல்துறை சார்ஜன்ட் ஒருவரை  கைது செய்ததுடன், அவர் கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் நிர்வாக பிரிவில்  கடமையாற்றி வந்த அம்பாறை மாவட்டத்தைச் சோந்த் சார்ஜன்ட் அங்கு கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண்; கான்ஸ்டபிள்கள்  முறைப்பாடு தெரிவித்ததை அடுத்து பொலிஸ் சார்ஜனிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரை நேற்று கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தார். 

இதனையடுத்து அவரை கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம்; தெரிவிததுள்ளனர்.

இதனிடையே அச்சுவேலி உள்ளிட்ட யாழ்ப்பாணத்து காவல்நிலையங்களினில் தமிழ் காவல்துறையினர் வரவேற்பு பகுதிகளிற்கு முன்னாள் சமூகமளிக்க அதிகாரிகள் தடுத்து வருவதாக தெரிகின்றது.


No comments