உணவு விலை குறைப்பு:செய்திகளில் மட்டுமே!



இலங்கையில் உணவுப்பொருட்களது விலைகள் குறைவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும்' உண்மையில் அவை வெறும் செய்திகளில் மட்டுமே உள்ளதாக பொதும்ககள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

நாளை முதல் உணவுப் பொதி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை 10 வீதத்தால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மா மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைவடைந்ததை அடுத்து இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சலுகை விலையில் சந்தையில் போதுமான உணவு இருப்புக்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாண் மற்றும் அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளையும் திருத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments