சாத்திரம் சொல்லவரும் சோதிடர்!இலங்கையின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றவுள்ள உரை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. சமகால பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதி தனது விசேட உரையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments