யாழிலும், மன்னாரிலும் போராட்டம்!இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகப்பணிகளிற்கெதிராக யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போராட்டத்தில்   நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் இணைந்திருந்தார்.

முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே பின்னர் மாவட்ட செயலகத்துக்குள் உள்நுழைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனிடையே மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் மன்னாரில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.


No comments