பிரான்ஸ் பிரச்சினைக்கு கோத்தாவுக்கு தொடர்பு?பிரான்சில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பட்டினியால் வாடும் நிலைமைகளுக்கும் ராஜபக்சக்களுக்கு தொடர்பு உள்ளதா என மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் கேள்வி எழுப்பினார்.

பிரான்சிழும் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பட்டினி நிலைஏற்பட்டுள்ளது . அங்கும் பாடசாலை மாணவர்கள் உணவின்றி மதிய உணவுப் பெட்டிகளைக் கொண்டு செல்கின்றனர்

இவை அனைத்தும் உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, கொவிட் தொற்றுநோயுடன் வந்ததை நாம் மறந்துவிட முடியாது. பூஜ்ஜியத்தில் இருந்த நாட்டின் பணவீக்கம் 10 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் எரிபொருள் வரிசைகள் உள்ளன. அங்கும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க முடியவில்லை, இங்கிலாந்தையும், பிரான்ஸையும் ராஜபக்சக்களா ஆண்டார்கள் என்று நாங்கள் கேட்கிறோம். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டதா, அதற்கு அவர்களா பொறுப்பு?”

இது ஒரு உலகளாவிய பொருளாதார நெருக்கடி. நாங்கள் எப்போதும் இறக்குமதிப் பொருளாதாரத்திற்குப் பழக்கப்பட்டதால் அந்த நெருக்கடி தீவிரமானது . நாங்கள் எல்லாவற்றையும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம் .

எனவே, எங்களால் இந்த பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை, இதன் விளைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments