தலைவராக மீண்டும் தமிழரசு ஜெயசேகரன்!

 


யாழ்ப்பாண வணிகக் கழகத்தின் தலைவராக மீண்டும் தமிழரசுகட்சி பிரமுகரான ஜெயசேகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் வருடாந்த நிர்வாக தெரிவு வணிகர் கழகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் கழகத்தின் உறுப்பினர்களின் ஏகமனதாக ஜெயசேகரன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு உப தலைவராக ஜெனக்குமாரும் செயலாளராக கேசவனும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments