பிரியமாலி பணத்தை கொடுக்கவில்லை: தமிதா அபேரத்ன!இலங்கையின் சிங்கள பிரபல நடிகையும் அரகலய இயக்கத்தின் முன்னணி நபருமான தமிதா அபேரத்ன, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 800,000 ரூபாவை மட்டுமே பெற்றதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் .மேலும் இந்த நிதி போராட்டத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் நலம் விரும்பிகளிடமிருந்து சுமார் இரண்டு மில்லியன் ரூபா பெற்றதாக சிலர் கூறுகின்றனர். இது உண்மையல்ல. எனக்கு ரூ.800,000 மட்டுமே கிடைத்தது. எனது கணவர் தமிழர், அவரது தாய் சிங்களவர். சிலர் கூறுவது போல் நான் ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டதால் என்னை விடுதலைப் புலி ஆதரவாளராக ஆக்கிவிட முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார் .

பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களிடம் இருந்து பெரும் தொகையை மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலி, தனக்கு எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை என்றும், தான் பிரியமாலியிடம் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றும் அபேரத்ன கூறினார்.

“எனது சகோதரனின் மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பிரியமாலி என்னை அழைத்தார். அவள் உதவ விரும்புவதாகச் சொன்னாள். தனிப்பட்ட விஷயங்களுக்காக எனக்குத் தெரியாதவர்களின் உதவியை நான் ஏற்கமாட்டேன். ப்ரியமாலி மீண்டும் எனக்கு போன் செய்து அவளிடம் 500,000 ரூபாய் டெபாசிட் செய்தால் அதை இரட்டிப்பாக்கலாம் என்றார். அபாயகரமான தொழில்களில் ஈடுபடும் வரை ஒருவரால் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க முடியாது,” என்று தமிதா கூறியுள்ளார்.

No comments