ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் நோக்கி பயணிக்கும் ராணியின் உடலம்!


பிரித்தானியாவின் மறைந்த ராணியின் உடல் பால்மோரல் மாளிகையில் இருந்து ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பால்மோரல் மாளிகையில் இருந்து ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் பயணிக்க 6 மணி நேரம் (175 மைல்கள்) எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் தலைநகரின் தெருக்களில் மக்கள் ஏற்கனவே ஒன்றுகூடத் தொடங்கியுள்ளனர். பல மணிநேரங்களில் ராணியின் இறுதி ஊர்வலத்தின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த வருகை தர உள்ளனர். தற்போதைய வேல்ஸ் இளவரசரும், இளவரசியுமான வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதி, இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகியோரும் விண்ட்சர் அரண்மனைக்கு வருகை தந்துள்ளனர்.

அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பிறகு, இங்கிலாந்து மக்கள் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக, ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் 4 நாட்கள் வைக்கப்பட உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்தின் முக்கிய பிரமுகர்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments