முன்னாள் சீன நீதி அமைச்சருக்கு மரணதண்டனை விதிப்பு!!



சீனாவின் முன்னாள் நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயரதிகாரியாக பதவி வகித்தவர் ஃபூ ஜெங்குவா. அவர் தனது பதவி காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் புரிந்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி சீன டெய்லி வெளியிட்டு உள்ள செய்தியில், ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சன் நகரில் அமைந்த மக்கள் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அவர் தன்னுடைய பதவி காலத்தில் நேரடியாகவோ அல்லது தனது உறவினர்கள் வழியாகவோ, வர்த்தக நடைமுறைகள், சட்டப்பூர்வ வழக்குகள் ஆகியவற்றில் மற்றவர்கள் பலனடையும் வகையில் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விசயங்களை செய்து முடிப்பதற்காக சட்டவிரோத வகையில் நடந்து உள்ளார்.

இதன்படி, $16.50 மில்லியன் அமெரிக்க டொலர் (117 மில்லியன் யுவான்) அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களாக முறைகேடாக பெற்றுள்ளார். இதனை அவர் ஒப்புக்கொண்டார்.  இதனை மக்கள் நீதிமன்றின் அரசு வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டாக முன் வைத்து உள்ளனர். இதனடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

No comments