ரணிலைச் சந்தித்தார் சமந்தா பவர்: 40 மில்லியன் டொலர் வழங்குவதாக அறிவிப்பு


சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்தார். 

இந்நிலையில், சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை இன்று காலை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு 10 ஆம் திகதி வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை வழங்குவதாக அறிவித்தார்.No comments