1350 கிலோ உருளைக்கிழங்கில் ரோஸ்டி சமைத்து உலக சாதனை!!


1350 கிலோ உருளைக்கிழங்கைத் துருவி சுவிற்சர்லாந்தில் தேசிய உணவான ரோஸ்டியை சமைத்து உலக சாதனையை முறியடித்துள்ளனர் சுவிஸ் விவசாய சங்கத்தினர்.

சுவிஸ் உழவர் சங்கத்தின் உறுப்பினர்கள் திங்கட்கிழமை அன்று பேர்ண் பாராளுமன்றக் கட்டத்தின் முன்பாக சிலுவை வடிவத்தில் 13 சதுர மீற்றர் ரோஸ்டியை சமைத்தனா. முன்னைய சாதனையான 10 சதுர மீற்றர் ரோஸ்டி சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.

லாபி குழுவின் 125 வது ஆண்டு நிறைவைக் குறித்தே இவர்கள் இச்சாதனையைச் செய்துள்ளனர்.

சமைக்கப்பட்ட ரோஸ்டியை பாராளுமன்ற சதுக்கத்தில் செல்லும் வழிப்போக்கர்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.


No comments