மின்சாரத்தில் இயங்கும் விமானம் அறிமுகம்!


மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Eviation நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த விமானத்துக்கு Alice என்று பெயரிடப்பட்டுள்ளது.

30 நிமிடம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து ஒரு மணி நேரம் பறக்கலாம் எனவும், 150 முதல் 250 மைல் தூரம் வரையிலான தூரத்துக்கு இந்த விமானத்தை பயன்படுத்தலாம் என்றும் Eviation நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பது இருக்கைகள் கொண்ட விமானம், Eviation இன் சகோதர நிறுவனமான magniX மூலம் அசெம்பிள் செய்யப்பட்ட இரட்டை மின்சார ப்ரொப்பல்லர் மோட்டார்கள் மூலம் சுழல்கின்றது.

விமானம் புறப்பட்ட பிறகு வலதுபுறமாக வளைந்து, மோசஸ் ஏரியில் உள்ள கிராண்ட் கவுண்டி சர்வதேச விமான நிலையத்தை சுற்றி எட்டு நிமிடங்கள் சுற்றி, பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. 3,500 அடி உயரத்தை அடைந்தது.

No comments