ஆளுநர் இல்லை: கைவிடப்பட்டது போராட்டம்!

மகசின் சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளிற்கு ஆதரவாக வடமாகாண ஆளுநரது யாழ்ப்பாண அலுவலக முன்றலில் குடும்பத்தவர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களது ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஆளுநர் யாழப்பாணத்தில் இல்லையென தெரிவித்து கைவிடப்பட்டிருந்தது. 

நீண்ட காலமாக அரசியல்கைதிகளின்  விடுதலை தொடர்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மைக் காலங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் இளைஞர்கள் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்வது குறிப்பிடத்தக்கது.

No comments