ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றிய இசியம் நகரில் 440 சடலங்களுடன் புதைகுழி!


ரஷ்ய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட இசியம் நகரில் உள்ள காட்டுப் பகுதியில் சுமார் 440 சடலங்களுடன் புதைக்குழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புச்சா நகர் சம்பவத்தை தொடர்ந்து, இசியம் நகரிலும் ரஷ்ய படைகள் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிரிழந்தோர் ரஷ்ய படைகளின் பீரங்கித் தாக்குதலிலும், வான்வழித் தாக்குதலிலும் கொல்லப்பட்டிருக்கலாம் என கார்கீவ் பிராந்திய தலைமை காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அனைத்து சடலங்களும் தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அனுப்ப ஐ.நா திட்டமிட்டுள்ளது.

No comments