குமுழமுனை காணிகளை பார்வையிட்டார் எம்பி!


முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை, குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகள் கவனத்தில் கொண்டுள்ளன.

குறித்த பகுதியில் மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்களை தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக் கூறியதன் பிரகாரம் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து காணிகளை பார்வையிட்டார்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்டு புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களை சுவிகரித்துள்ளதாகவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களை வாழ்வாதாரங்களை பாதிக்கும் என்றும் அமைச்சருக்கு தெளிவு படுத்தினார்.No comments