மணல்காடு : 37 கிலோகிராம் கேரள கஞ்சா!யாழ்ப்பாணம் – மணல்காடு பகுதியில் 37 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு(05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த தொகை கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

யாழ்.கிளாலி பகுதியை சேர்ந்த 17 மற்றும் 29 வயதான இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 11 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களையும்.கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

No comments