ரெலோ பிழைவிடாது:சுரேஸ்!இலங்கை ஜனாதிபதியுடன் டெலோ பல விடயங்களை பற்றி பேசியுள்ள போதிலும் அத்தகைய பேச்சினை ஜநா அமர்வன்  பின்னராக பேசியிருக்கலாமென தெரிவித்துள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியஜன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கையினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் கோரிக்கையினை ஏனைய தமிழ் தேசியக்கட்சிகளுடன் இணைந்து டெலோவும் வலியுறுத்தி ஒப்பமிட்டிருந்தது.

அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து டெலோ விலக மாட்டாதென நான் உறுதியாக நம்புகின்றேன்.

அதேவேளை ஜநா அமர்விற்கு செல்வம் அடைக்கலநாதனும் செல்வதாக அறிகின்றேன்.

ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அவர் ஜநாவிற்கு அனுப்பிய மகஜரில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுக்க குரல் எழுப்புவார் எனவும் நம்புகின்றேன்.

அதேவேளை ரணிலுடனான சந்திப்பினை ஜநா அமர்வின் பின்னராக டெலோ முன்னெடுத்திருக்கமுடியுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனிடையே ரெலோ தனித்து ஜனாதிபதியைச் சந்தித்துள்ளது. ஜனாதிபதிக்கு எம்மில் சிலர் வாக்களித்தனர் என்று சொல்லப்படுகின்றது. அதை அவர்களே வெளிப்படுத்துகின்றார்கள் என சி.சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments