ஜதேகவினை குழிதோண்டி புதைக்கிறார் ரணில்!ரணில்  ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களை குழிதோண்டிப் புதைத்த குற்றவாளிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி இன்று கடமையை நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு, மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று தத்தமது துக்கங்களைக் கூறி தலைவணங்க நேரிட்டுள்ளதாகவும் , தெரிவித்தார்.

அநீதி இழைக்கப்பட்ட அனைவருக்கும் தனது கடமைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என தற்போதைய ஜனாதிபதி அப்போது கூறியிருந்த போதும், தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள தலைவிதி வருந்தத்தக்கது எனவும், தவறாக வழிநடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் நெலும் மாவத்தையிலுள்ள காக்கையிடமிருந்தே வேட்புமனுக்களைப் பெற வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments