உடையார்கட்டில் நினைவுகூரப்பட்ட திலீபன்
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு உடையார் கட்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு உணர்வு
பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.நினைவேந்தல் நிகழ்வு உடையார் கட்டு நகரில் அமைக்கப்பட்ட விசேட கொட்டகையில் இடம்பெறுகிறது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
Post a Comment