தப்பிச்செல்லும் அகதிகளை துரத்தி பிடிக்கிறது கடற்படை!அகதியாக இந்தியாவிற்குள் செல்ல முற்பட்ட இலங்கையர்களை இலங்கை கடற்படை வழிமறித்து கடத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

இந்தியாவிற்கு தப்பிச்  செல்ல எல்லைக்குள் சென்ற 07  பேரை இந்திய எல்லைக்குள் புகுந்து  இலங்கை  கடற்படையினர்  கைது செய்துள்ளதாக இந்தியத் தரப்புக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மன்னார் பகுதி கடல் ஊடாக கிளிநொச்சியைச் சேர்ந்த 7 பேர் படகில் பயணித்து இந்திய எல்லைக்குள் உள்ள திடலில் இறங்கி நின்ற சமயம் இந்திய படகுகள் வர ஏற்பட்ட காலதாமதத்தின்போது இலங்கை கடற்படையினர் உள் நுழைந்து இலங்கை அகதிகளை தூக்கிச் சென்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது  இரண்டு  பெண்கள் மற்றும் 5  சிறுவர்கள்  உட்பட 7 பேரே  சட்டவிரோதமாக நாட்டிலிருந்து குடிபெயர்வதற்காக கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முற்பட்டபோதே இந்த 7  பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் தற்போது தலைமன்னாரில் கடற்படையினரின் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments