சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து தப்பியோட்டம்?இலங்கையில் நீதிமன்றுக்குள்ளேயே துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில் கைதிகள் தப்பித்த பிரிதாபம் சாவகச்சேரியில் நடந்துள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இருந்து இரு சந்தேகநபர்கள் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் தலைமறைவாகியுள்ளார்.

போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் புதன்கிழமை (08) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை, நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியவர்களை சிறைக்காவலர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து துரத்திய போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.


No comments