இந்தியா போராட உதவவேண்டும்:முன்னாள் புலிகள்!முதன்முறையாக என்றுமில்லாதவாறு ஈழத்தமிழர் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்திருக்கின்றது. ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பன வழங்கப் படவேண்டும் என்பதை இந்தியா வலிறுத்தியிருக்கின்றது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவின்; நிலைப்;பாட்டில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது எம்மால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றமே. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். முதன்முறையாக என்றுமில்லாதவாறு மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. ஈழத்தமிழர் தொடர்பாகவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்திருக்கின்றது. ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பன வழங்கப் படவேண்டும் என்பதை இந்தியா வலிறுத்தியிருக்கின்றது. 

அதேபோன்று மாகாண அதிகாரங்கள் தொடர்பிலும் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின்; முன்னாள் போராளிகள் சார்ந்த அரசியற் கட்சியாகிய நாம் வரவேற்று இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு தொடர்ந்தும் எமது ஆதரவினை வழங்குவோம். எதிர்காலத்திலும் எமது மக்களின் உரிமை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் சர்வதேச ரீதியில் இவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என நாங்கள் இந்திய அரசாங்கத்திடம்; கேட்டுக் கொள்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

 


No comments