417 இல் ஒருவருமேயில்லை!

 தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் விடுவிக்கப்பட்ட கைதிகளுள் தமிழ் அரசியல் கைதிகள் எவருமே விடுதலை செய்யப்பபடவில்லை.

இலங்கை ஜனாதிபதியினால் விடுதலை தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தபோதும் மீண்டும் ஏமாற்றப்பட்டிருப்பதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்  தேசிய கைதிகள் தினத்தையோட்டி 417 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ஒரு தமிழரசியல் கைதியும் விடுவிக்கப்படவில்லை. 46 தமிழரசியல் கைதிகள் வீட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பாத்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது என தெரிவித்தார்.

No comments