சிறைகளில் அரசியல் கைதிகளது குடும்பங்கள!ஜநா அமர்வு நாளை திங்கள் கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளான தமது உறவுகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நியூமகசீன் சிறைக்குள் சென்றுள்ளனர்.

குரலற்றவர்களின் குரல்  அமைப்பு  யாழ் ஊடக அமையத்தின் முழுமையான ஆதரவில் பயணத்தை ஒழுங்குபடுத்தப்படுத்தியிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் யாழ் ஊடக அமையத்திற்கு வருகைதந்து பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

வவுனியாவில் ஊடகவியலாளர்களது ஆதரவு வருகையுடன் வரவேற்கப்பட்ட அரசியல் கைதிகளது குடும்பங்களை கொழும்பில் தங்க வைத்து ஆதரவு வழங்கியிருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.

நியூமகசீன் சிறை வரை அழைத்து சென்றிருந்தார் மலைய அரசியல் தலைவரான சதீஸ்குமார்.

வடகிழக்கு முதல் மலையகம் வரையான அரசியல் கைதிகளது ஒரே சந்தர்ப்பத்திலான பயணம் அனைத்து மட்டங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.  

No comments