விற்பனையில் வடமாகாண சபை வாகனங்கள்!யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தனது மனைவிக்கு பயன்பாட்டிற்கு வழங்கிய நிலையில் பறிக்கப்பட்ட வாகனமொன்றை கொழும்பிற்கு வழங்க தற்போதைய ஆளுநர் முற்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரின் பயன்பாட்டிற்காக 2014ஆம் ஆண்டு புதிதாக தருவிக்கப்பட்ட  வாகனத்தை பொலிசாருக்கு வழங்குமாறு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண பிரதம செயலாளருக்கு எழுத்தில் உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளார். 

ஏற்கனவே முன்பிருந்த ஆளுநரின் காலத்தில் இரு வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பயன்பாட்டிற்காக அனுப்பிய நிலையில் அந்த இரு வாகனமும் இன்றுவரை வடக்கு மாகாணத்திற்கு மீளக் கையளிக்கப்படவில்லை.


No comments