வீடு செல்லும் கல்விப்பணிப்பாளரிற்கு இரண்டாயிரம் டொலர்!



யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் தென்கொரியா நாட்டில் இடம்பெறவுள்ள கொய்கா திட்டத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சுற்றுலாவிற்கு பொருத்தமற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்விமான்கள் விசனம் வெளியிடப்பட்டுள்ளனர்.

இச்சுற்றுலா எதிர்வரும் ஒக்டோபர் மாதப் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொய்க்கா திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் கல்வி அபிவிருத்தியில் துரித மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் 12 கல்வி அதிகாரிகளும், மாகாண கல்வித் திணைக்களத்தில் 3 அதிகாரிகளுமாக 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இத் திட்டத்தில் மாணவர்களுக்கான கல்வியில் நேரடித் தொடர்பு கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள்,  சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் இவற்றைக் கருத்தில் கொள்ளாது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கர்களை உள்வாங்க மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வருட இறுதியுடன் ஓய்வுபெறும் வடமாகாண கல்விபணிப்பாளரிற்கு புலமைச்சரிசில் வழங்கவுள்ளது இலங்கை அரசு

 இத்திட்டத்திற்காக ஒருவருக்கு 5ஆயிரம் டொலரும், ஒட்டு மொத்தமாக 15 பேருக்கும் 75 ஆயிரம் டொலரும் செலவு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்கால கல்வி அபிவிருத்திக்கான செயற்பாட்டை மேற்கொள்ள ஓய்வு பெற உள்ள மாகாண கல்விப் பணிப்பாளர் உள்வாங்கப்பட்டதுடன்இ

கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக்கான சுற்றுலாவில் இடமாற்றத்திற்காக காத்திருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு கிளிநொச்சி மாவடத்தில் நீண்ட காலம் கடமையாற்றும் ஆசிரியர்கள்இ ஆசிரிய ஆலோசகர்கள் உள்வாங்கப்படாமைக்கான காரணம் யாது எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

No comments