இருபாலையிலும் ஒன்றுமில்லை!30வருடங்களின் பின்னராக இருபாலையில் தோண்டப்பட்ட புதையல் ஏதுமின்றி மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தகைய புதையல் பற்றி கதைகளை கட்டவிழ்த்து விடுபவர்கள் பற்றி கேள்வி எழுந்துள்ளது

இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ எதுவும் மீட்கப்படவில்லை.

இந்த அகழ்வுப் பணி காலை 9.30 மணிமுதல் மதியம் 2 மணி வரை இடம்பெற்றது. தோண்ட தோண்ட கல்லே வந்தது. இந்நிலையில் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின் ஏற்பாட்டில் இந்த அகழ்வுப் பணி இடம்பெற்றது.

No comments