இடித்து நொருக்கப்பட்ட தமிழக படகுகள்!தமிழ்நாட்டு மீனவர்களிற்கு சொந்தமான இலங்கை நீதிமன்றங்களினால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் இன்று பழைய இரும்பிற்கு நொருக்கி அகற்றப்பட்டுள்ளது.

நிவாரணத்திற்கு கையேந்துவோம், மண்ணெண்ணெய்க்கு மண்டியிடுவோம், ஆனால், அந்த நாட்டு மீனவர்களின் படகுகளை அடித்து உடைத்து விறகுக்கு விற்போம் என செயற்பாட்டாளர் ஒருவர் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் 

காரைநகரில் இலங்கை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான இந்திய தமிழ்நாட்டு  மீனவர்களின் படகுகள் இன்று கனரக வாகனங்கள் சகிதம் அடித்துடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments