மீண்டும் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, அளம்பில் பகுதிக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் நேற்று(06) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கைக் கடற்பரப்பிற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி படகுடன் அதிலிருந்த 12 மீனவர்களும் இதன்போது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் தற்போது திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் அவர்களை திருகோணமலை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கடற்படை கூறியுள்ளது.No comments