தொடங்கியது தேர்தல் காய்ச்சல்!

 


தேர்தல் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்படாமல் தேர்தல்கள் சாத்தியமில்லையென்ற அறிவிப்பின் மத்தியில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பொதுமக்கள் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்    இடம்பெற்று வருகின்றது.

யாழ்  மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரன் கிறிஸ்டி தலைமையில் இடம் பெற்று வரும் குறித்த நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் நாயகம்   சமன் ஸ்ரீ ரத்னநாயக்க, யாழ்  மாவட்ட அரசாங்க அதிபர்,நிர்வாக பணிப்பாளர் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல்கள் ஆய்வு நிறுவனத்தின் மஞ்சுளா கஜநாயக்க ஆகியோர் குறித்த செயலர்வில் கருத்துரைகளை வழங்க உள்ளார்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தினை  பிரதிநிதிதுவபடுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்கள்.

No comments