ஜெயராஜை பஸிலே கொன்றார்! அம்பலமான உண்மை!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவர் பசில் ராஜபக்ச என விடுவிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி லக்ஸ்மன் குரே தெரிவித்துள்ளார். 

ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கவில்லை .ஆனால் பசில் ராஜபக்சவிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்தது.கம்பஹா மாவட்டத்தில் பசிலின் அரசியல் வருகையை ஜெயராஜ் எதிர்த்தார்.

வெலிவேரியவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக ஜெயராஜ் கலந்து கொண்டார். 06.04.2008 அன்று வெலிவேரிய மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை உட்பட 16 பேர்; கொல்லப்பட்டனர்.

டி.எம்.தசநாயக்க மற்றும் ஜெயராஜ் கொலையாளிகளுடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

வெலிவேரிய குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பசிலின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் இருந்தனர். குண்டுவெடிப்பு நடந்த உடனேயே இவர்கள் இருவரும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த அவர்கள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, இம்புல்கொடையில் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டனர்.துப்பாக்கி சூட்டையடுத்து, மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியுள்ளது. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மற்றவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரும் உயிரிழந்தார்.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் குண்டுவெடிப்புடன் பசிலின் தொடர்பு குறித்து ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்திடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஹன்சார்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்றுவரை யாரும் பதில் அளிக்கவில்லையெனவும் விடுதலையான காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


No comments