காயங்களில் உப்பு தூவி...சீறும் சீனா!



அடுத்த மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்கள் மீண்டும் பரபரப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை பாரிய நெருக்கடிகளையும் மனிதாபிமானச் சிக்கல்களையும் எதிர்நோக்கும் இவ்வேளையில், இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதாகக் கூறும் இந்த நாடுகள் மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கைக்கு கணிசமான உதவிகளை வழங்குமா? அல்லது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டு இலங்கை மக்களின் காயங்களில் உப்பு தூவி மனித உரிமைகளை ஒரு கருவியாக தொடர்ந்து பயன்படுத்துவதா? பொறுத்திருந்து பார்ப்போம் என பொங்கியுள்ளது கொழும்பிலுள் சீன தூதரகம்.

யாழ்.பல்கலைக்கலைக்கழக மாணவர்களது கருத்திற்கு எதிர்வினையாற்றியே சீன தூதரகம் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளது.

ஒரு-சீனா கொள்கையை பாதுகாப்பது சீனாவின் முக்கிய நலன்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஐ.நா சாசனம் மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் பாதுகாக்கிறது. அமெரிக்காவின் மிகவும் பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்ற நடவடிக்கைகளை சீனாவும் சர்வதேச சமூகமும் உறுதியாக எதிர்க்கவில்லை என்றால், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத கொள்கைகள், சர்வதேச உறவுகளில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவை ஒரு முட்டுச்சந்தாக மாறும், மேலும் உலகம் காட்டின் சட்டம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்திற்கு திரும்பவும் கூடும் எனவும் கொழும்பிலுள் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments