அடுத்த அமைச்சர்கள் பட்டியலில் சி.வியும்!



இலங்கையில் அடுத்து பதவியேற்கவுள்ள பத்து அமைச்சர்களில் சி.வி.விக்கினேஸவரனின் பெயருமுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. 

அமைச்சர்களாக நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்சன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சி.வி.விக்னேஸ்வரன், துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவியேற்கவுள்ளதோடு பிரியங்கர ஜயரத்ன மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த நியமனங்கள் உடனடியாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சூழலை கருத்திற் கொண்டு எஞ்சிய அமைச்சுக்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments