பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு! முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா   பயணித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி, அவர் அமெரிக்கா செல்வதற்காக அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார், ஆனால் பசில் ராஜபக்ஷ, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார்.

மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஆனால், சமீபத்தில் நீதிமன்றத் தடை தளர்த்தப்பட்டு ஜனவரி மாதம் வரை அவர் வெளிநாடு செல்லத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

அதன்படி முதலில் டுபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments