சுவீடனில் பூங்கா ஒன்றில் வெடிபொருட்களுடன் பை மீட்பு!


சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் வெடிபொருட்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை ஸ்வீடன் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பை வெடிகுண்டு நிபுணர்களால் அழிக்கப்பட்ட பின்னர் பொது அழிவு முயற்சி பற்றிய ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்களுடன் இருந்த பை கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

சாத்தியமான தாக்குதல் இலக்கு பற்றிய தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. சந்தேகத்தின் பெயரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

ஸ்வீடன் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

No comments